தமிழ்நாடு ப்ரீமியர் லீக் (TNPL) கிரிக்கெட் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் சிஎஸ்கே அணி வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அளவில் நடைபெறும் டிஎன்பிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் ஜூன் 23ம் தேதி முதல் தொடங்கி நெல்லை, சேலம், திண்டுக்கல், கோவை உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளது.
இதன் முதல் போட்டி 23ம் தேதி திருநெல்வேலியில் நடைபெறுகிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியுடன் நெல்லை ராயல் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதுவரை 5 முறை நடந்துள்ள டிஎன்பிஎல் போட்டிகளில் சேப்பாக் அணி 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இந்த சீசனில் விளையாட உள்ள சேப்பாக் அணி வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. கேப்டனாக கவுசிக் காந்தி தலைமை தாங்குகிறார்.