தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 தொடர்: கே.எல்.ராகுல் திடீர் விலகல்

புதன், 8 ஜூன் 2022 (18:50 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையே நாளை டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுல் திடீரென விலகி விட்டதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய அணி கேப்டன் ராகுல் விலகியதற்கு காரணம் காயம் என்றும் இன்று அவர் பயிற்சியில் ஈடுபட்ட போது ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விலகுகிறார் என்று கூறப்படுகிறது
 
இதனை அடுத்து இந்திய அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்