முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 408 ரன்கள் குவிப்பு

Webdunia
வியாழன், 28 டிசம்பர் 2023 (19:29 IST)
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்த  நிலையில் ஒரு நாள் தொடரை 21 எனக் கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் ஆரம்பமாகி நடந்து வருகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், முதல் நாளில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது.

59 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்த நிலையில்  மழையால் ஆ முதல் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

அப்போது ராகுல் 70 ரன்களுடன் களத்தில் இருந்த நிலையில், நேற்று 2 வது நாள் ஆட்டம் ஆரம்பமானது.  ராகுல் சதம் அடித்து அசத்த்னார். எனவே இந்திய அணி 67.4 ஓவர்களில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.  இந்திய அணி சார்பில் கே.எல்.ராகுல் 101 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 2வது நாள் முடிவில்   விக்கெட்கள் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்தது.

இன்று 3 வது நாள் ஆட்டம் தொடங்கியது. இதில்,டீன் எல்கர் 185 ரன்கள் எடுத்தபபோது, ஷர்த்துல் தாகூர் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, ஜெரால்ட் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்த நிலையில், தென்னாப்பிரிக்கா அணி 408 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.

இந்திய அணி சார்பில் பும்ரா 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்