ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டன் ரோஹித் சர்மா- மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம்

வெள்ளி, 15 டிசம்பர் 2023 (20:27 IST)
10 ஆண்டுகளாக மும்பை அணிக்கு கேப்டனாக இருந்த ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக ஹர்த்திக் பாண்ட்யாவை நியமித்துள்ள அணி நிர்வாகம்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நடந்து வருகிறது.  இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் முக்கிய அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் அணியின் 10 ஆண்டுகளாக  கேப்டன் பொறுப்பில் இருந்து, இதுவரை  முறை கோப்பை வெல்ல காரணமாக இருந்தவர் ரோஹித் சர்மா.

இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்த்திக் பாண்ட்யாவை நியமித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ரோஹித் சர்மாவின் கேப்டன்சிக்கு பிரியாவிடை அளித்துள்ளது மும்பை அணி நிர்வாகம்.

இதுகுறித்து அந்த அணி தெரிவித்துள்ளதாவது:

‘’ரோஹித் சர்மாவின் ஒப்பற்றை தலைமைக்கு  நன்றி. கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் மும்பை அணிக்கு  கேப்டனாக அவரது பங்களிப்பு அசாதாரணமானது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றியைக் குவித்தது மட்டுமில்லாமல் ஐபிஎல் வரலாற்றில் சிறந்த  கேப்டனாகவும் அவர் இடம்பிடித்துள்ளார்.

அணியை மேலும், வலுப்படுத்த களத்திலும்,  வெளியிலும் அவரின் வழிக்காட்டுதல்களை எதிர்பார்க்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளது.

ரசிகர்கள் இந்த அதிர்ச்சியில் இருந்து மீள இன்னும் சில நாட்கள் ஆகும் என தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்