ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தை விற்பனை! 11 பேரை டிக்கெட்டும் கையுமாக கைது செய்த போலீஸ்!

Prasanth Karthick

ஞாயிறு, 6 ஏப்ரல் 2025 (09:28 IST)

ஐபிஎல் போட்டி டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்ற 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

ஐபிஎல் போட்டிகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் டிக்கெட்டுகளை ப்ளாக் மார்க்கெட்டில் விற்கும் கும்பலும் அதிகரித்துள்ளது. ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளதால், சென்னை போட்டிகளுக்கான டிக்கெட்டுகளுக்கு ஏக கிராக்கி உள்ளது.

 

தற்போது டிக்கெட்டுகளை முழுவதும் ஆன்லைன் மயமாக்கிவிட்ட போதிலும் கூட பலர் டிக்கெட்டுகளை வாங்கி அதிக விலைக்கு விற்பது தொடர்கிறது. 4 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்படும் டிக்கெட்டுகள் ப்ளாக் மார்க்கெட்டில் 15 ஆயிரம் வரை விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

 

இதுகுறித்து போலீஸார் நடவடிக்கை எடுத்த நிலையில் நேற்றைய சென்னை - டெல்லி அணி போட்டிக்கான டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 11 பேரை கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் மேல் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 34 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்