100 கோடி நஷ்டஈடு வழக்கு! நீதிமன்றம் வர மறுத்த தோனி! - என்ன காரணம்?

Prasanth K

திங்கள், 11 ஆகஸ்ட் 2025 (18:10 IST)

பிரபல கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தொடர்ந்த அவதூறு வழக்கில் தோனி வாக்குமூலம் செலுத்த நேரில் வர இயலாது என சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.

 

பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான எம்.எஸ்.தோனி ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். இடையே இரண்டு ஆண்டுகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூதாட்ட புகாரில் தடை செய்யப்பட்டிருந்தது. அதில் தோனியை தொடர்பு படுத்தி அவதூறு பரப்பியதாக ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார், தனியார் செய்தி நிறுவனம் மீது வழக்குத் தொடரப்பட்டு நஷ்ட ஈடாக 100 கோடி தர வேண்டும் என சென்னை நீதிமன்றத்தில் கோரப்பட்டிருந்தது.

 

இந்த வழக்கில் தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய அவர் நேரில் வர சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், தான் நீதிமன்றத்திற்கு நேரில் வந்தால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும் என்றும், அனைத்து தரப்பினரின் வசதிக்கு ஏற்ப ஏதேனும் ஒரு இடத்தை தேர்வு செய்தால் வாக்குமூலம் அளிக்க தயார் என்றும் எம்.எஸ்.தோனி நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்தார்.

 

அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம், தோனி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பிறகு வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என தெரிவித்துள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்