டெஸ்ட் போட்டி: இந்திய அணி 574 ரன்கள் எடுத்து டிக்ளேர்

Webdunia
சனி, 5 மார்ச் 2022 (15:14 IST)
இலங்கைக்கு எதிரான  முதல் டெஸ்ட் போட்டியில் 2 வது நாள்  ஆட்டத்தில்  8 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.

இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
இ ந் நிலையில், இதில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில்  நேற்று முதல் டெஸ்ட் போட்டி  நேற்று தொடங்கியது.

முதலில் பேட்டிங் செய்த ரோஹித் தலைமையிலான இந்திய அணியில், ரோஹித் 29 ரன்களும், மயங்க் அகர்வால் 33 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர்.

பின்னர், விராட் கோலி 45 ரன்களில் வெளியேறினார். இதன் பின்னர் ஸ்ரேயாஸ் 14 ரிஷப் பாண்ட் 12 ரன்களுடன் விளையாடினர். பின்னர் ஸ்ரேயாஸ் 27 ரன்களில் அவுட் ஆகவே, ரவீந்திர ஜடேஜா ரிஷப்புடன் இணைந்து பொறுமையாக விளையாடினார். ரிஷப் பாண்ட் 95 ரன்களில் அவுட் ஆகி சதத்தை தவறவிட்டார்.

ஜடேஜா 45, அஸ்வின் 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருன்டஹ்னர்.  எனவே முதல்  நாள் ஆட்ட நேர முடிவில் 85 ஓவர்களில் 6விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 357 ரன் கள் எடுத்தது.

இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தில் அஸ்வின் 61 ரன் களும் ஜெயந்த் 2ரன்களில் வெளியேறினர். ஜடேஜா 175 ர ன்களும் சமி 20 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்திய அணி 129.2 ஓவர்களில் இன்றைய ஆட்டத்தில்  8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 574 எடுத்து டிக்ளேர் செய்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்