ரோஹித் ஷர்மாவின் செயலால் செம்ம கடுப்பான ரசிகர்கள்… டிவிட்டரில் கொந்தளிப்பு!

Webdunia
சனி, 5 மார்ச் 2022 (14:19 IST)
முதல் இன்னிங்ஸில் ஜடேஜா இரட்டை சதம் அடிக்க இன்னும் 25 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் இருக்கும் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா டிக்ளேர் செய்தது ரசிகர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

இலங்கைக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி இரண்டாம் நாள் தேநீர் இடைவேளையின் போது டிக்ளேர் அறிவித்தது.  இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கி நடந்து வந்த நிலையில் பேட்ஸ்மேன்கள் வேகமாக ரன்களை சேர்க்க ஆரம்பித்தனர். சிறப்பாக விளையாடிய ஜடேஜா டெஸ்ட் போட்டிகளில் தனது இரண்டாவது சதத்தை அடித்து வேகமாக இரட்டை சதத்தை நோக்கி முன்னேறினார்.

இந்நிலையில் இந்திய அணி 8 விக்கெட்களை இழந்து 574 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் தேநீர் இடைவேளை அறிவிக்கப்பட்டது. அதையடுத்து இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். ஜடேஜா 175 ரன்களோடு களத்தில் அவுட் ஆகாமல் இருந்தார்.


ரோஹித் ஷர்மாவின் இந்த டிக்ளேர் முடிவால் ஜடேஜாவின் முதல் இரட்டை சதக் கனவு பலிக்காமல் போயுள்ளது. இது சம்மந்தமாக ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். மேலும் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் முடிவு தவறானது என்றும் தங்கள் விமர்சனங்களை கொட்டி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்