தற்போது ஆடிவரும் ஆஸ்திரேலிய அணி 71 ரன்களுக்கு மூன்று விக்கெட்களை இழந்துள்ளது. ஆஸி அணி வெற்றிபெற இன்னும் 91 ரன்கள் தேவை. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் பும்ரா இந்த இன்னிங்ஸில் பந்துவீசவில்லை. அது இந்திய அணிக்குப் பெரும்பின்னடைவாக அமைந்துள்ளது, இதனால் இந்த போட்டி மூன்று நாட்களில் முடியவுள்ளது.
இந்நிலையில் சிட்னி மைதானம் குறித்து பேசியுள்ள சுனில் கவாஸ்கர் “எப்போதும் இந்திய மைதானங்களை ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் குறை சொல்வார்கள். ஆனால் சிட்னியில் முதல் நாளில் மைதானத்தில் இருந்த புற்களைப் பார்த்திருந்தால் மாடுகள் மேயத் தொடங்கியிருக்கும். அன்று நடந்ததைப் போல ஒரே நாளில் 15 விக்கெட்கள் விழுந்திருந்தால் அதைப் பெரிதாக்கி இருப்பார்கள்” என விமர்சித்துள்ளார்.