நான் இன்னும் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறேன் என்று ஆஸ்., கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்றது.
இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஆஸ்திரேலியா, வங்கதேசம், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றன.
இதில், இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
இதில், ஆஸ்திரேலியா அணி சூப்பர் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றனர். இந்த நிலையில் , நான் இன்னும் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறேன் என்று ஆஸ்., கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
''நான் இன்னும் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறேன். நாங்கள் கடந்து செல்லுகையில் மக்கள் அனைவரும் உலக்க கோப்பை பற்றி பேசுகின்றனர். நாள்தோறும் காலையில் விழிக்கையில் உற்சாகத்துடன் இருக்கிறேன்.வெற்றியின்போது நிறைய கற்றுக் கொள்ளுவீர்கள்.ஆனால் தோல்வியில் அதைவிட அதிகம் கற்றுக்கொள்வீர்கள்'' என்று தெரிவித்துள்ளார்.