இலங்கையில் புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் நியமனம்

திங்கள், 27 நவம்பர் 2023 (21:10 IST)
இலங்கை அரசின் புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக ஹெரின் பெர்னாண்டோ நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
 
இந்தியாவில்   சமீபத்தில் உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. இதில், பங்கேற்ற இலங்கை அணி மோசமான தோல்வியை சந்தித்து சர்ச்சையில் சிக்கியது.
 
இதையடுத்து, இலங்கை கிரிக்கெட் வாரிய விவகாரங்கள் தன்னாட்சி முறையில் நிர்வகிக்கப்பட வேண்டும். இலங்கை கிரிக்கெட் வாரிய  நிர்வாகத்தில் அரசின் தலையீடு இல்லை என்பதை அந்த நாட்டு கிரிக்கெட் போர்டு  உறுதிப்படுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுத்து,  இலங்கை அணியை சஸ்பெண்ட் செய்வதாக  ஐசிசி அறிவித்தது.
 
இந்த நிலையில் அடுத்தாண்டு இலங்கையில் நடைபெற இருந்த ஐசிசி  யு19 உலகக் கோப்பை தொடர் தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது.
 
ஐசிசியில் இருந்து இலங்கை கிரிக்கெட் வாரியம் அண்மையில் இடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், under19  உலகக் கோப்பை நடத்தும் வாய்ப்பு தென்னாப்பிரிக்காவுக்கு வழங்கப்பட்டது.
 
இந்த நிலையில்,  இலங்கை அரசின் புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக ஹெரின் பெர்னாண்டோ நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
 
ஏற்கனவே சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ள ஹெரினுக்கு கூடுதலாக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்றைய அமைச்சரவை கூட்டத்தின்போது., ரோசன் ரனசிங்கே பதவி நீக்கம் செய்யப்பட்ட  நிலையில்  அதிபர் ரனில் விக்ரமசிங்கே நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டுள்ளார்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்