இந்திய அணி உலகக்கோப்பையை விரைவில் வெல்லும்… ஆனால்?- ரவி சாஸ்திரியின் கணிப்பு!

செவ்வாய், 28 நவம்பர் 2023 (10:10 IST)
நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரை இந்தியா வெல்லும் என பலரும் எதிர்பார்த்தார்கள். இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரியும் இதே கருத்தை முன்வைத்திருந்தார். அதில் “இந்திய அணி 12 ஆண்டுகளுக்கு முன்னர் கோப்பையை வென்றது. இந்த முறை கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. இந்த முறை தவறவிட்டால் இன்னும் 3 தொடர்கள் காத்திருக்க வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்போது பேசியுள்ள ரவி சாஸ்திரி “இந்திய அணி திறமை இருந்தும் உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் போனது கடினமானது.  விரைவிலேயே உலகக் கோப்பையை வெல்வதை காண்போம். ஆனால் அது 50 ஓவர் உலகக் கோப்பையாக இருக்காது.  ஆனால் அது டி 20 கிரிக்கெட்டாக இருக்கலாம்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி கடும் போட்டியாளராக இருக்கும். அதற்கான வலு இந்திய அணியிடம் உள்ளது. இந்திய அணி குறுகிய வடிவிலான போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்