இங்கிலாந்து அணி எப்போதுமே சராசரியான அணிதான்… சேவாக்கின் தடாலடி கருத்து!

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2023 (07:02 IST)
2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. இதனால் அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட காலியாகியுள்ளது. பெங்களூருவில் நேற்று நடந்த உலகக்கோப்பைப் போட்டியின் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை, 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி தோற்கடித்தது. இதன் மூலம் இந்த தொடரில் நான்காவது தோல்வியைப் பதிவு செய்துள்ளது இங்கிலாந்து அணி.

தற்போது இங்கிலாந்து அணி நெதர்லாந்து மேலாக 9 ஆவது இடத்தில் உள்ளது. இதனையடுத்து பல முன்னாள் வீரர்களும் இங்கிலாந்து அணி மீது விமர்சனங்களை வைத்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் வைத்துள்ள கருத்து கவனம் பெற்றுள்ளது.

தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் “50 ஓவர் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து மிகவும் சாதாரணமான அணி. 2019 ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடந்த உலகக் கோப்பையைத் தவிர, கடந்த 8 முயற்சிகளில் 7 முறை அரையிறுதிக்கு முன்னேற முடியவில்லை. ஒரு நிலையான அணி இல்லாதது மற்றும் அதிகமான ப்ளேயர்களை மாறுவது என  டெஸ்ட் போட்டிகளில் இருப்பதைப் போலவே ODIகளிலும் தாங்கள் உற்சாகமாக இருப்பதாக தவறாக நினைக்கிறார்கள்.” என அவர் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்