இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் ஹர்திக் பாண்ட்யா இல்லை!- இந்திய அணிக்கு சிக்கலா?

புதன், 25 அக்டோபர் 2023 (09:32 IST)
காயமடைந்த ஹர்திக் பாண்ட்யா இங்கிலாந்து எதிராக உலக கோப்பை அணியில் பங்கேற்க மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.



ஐ சி சி உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் இதுவரை ஐந்து போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இந்தியா ஐந்து போட்டிகளிலுமே வெற்றி பெற்று தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளது. கடந்த போட்டியில் 20 ஆண்டுகளாக தோற்கடிக்க முடியாமல் இருந்த நியூசிலாந்து அணியை இந்தியா தோற்கடித்து புதிய சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து அடுத்ததாக இங்கிலாந்து அணியுடன் இந்திய அணி மோத உள்ளது.

முன்னதாக வங்கதேச அணியுடன் நடந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா காயமடைந்தார். இதனால் அவர் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை. ஆனால் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற உள்ள போட்டியில் அவர் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் அவருக்கு இன்னும் காயம் குணமடையாததால் அவர் இங்கிலாந்து போட்டியில் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

கடந்த போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்ற முகமது ஷமி, ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக பந்துவீச்சை தொடரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்