ப்ளே ஆஃபில் இருந்து வெளியேறப் போவது யார்? டாஸ் வென்ற சஞ்சு சாம்சன் எடுத்த முடிவு!

vinoth
புதன், 22 மே 2024 (19:08 IST)
கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேல் நடந்த ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் முடிந்து தற்போது ப்ளே ஆஃப் போட்டிகள் நடந்து வருகின்றன. கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடந்த முதல் குவாலிஃபையர் போட்டியில் வென்ற கொல்கத்தா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று நடக்கும் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான சற்று முன்னர் வீசப்பட்ட நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளார். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி குவாலிஃபையர் இரண்டுக்கு தகுதி பெறும், தோற்கும் அணி வெளியேறும் என்பது குறிப்பிடத்தகக்து.

ஆர் சி பி அணி
விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ்(c), ரஜத் படிதார், கேமரூன் கிரீன், க்ளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக்(w), மஹிபால் லோம்ரோர், கர்ண் சர்மா, யாஷ் தயாள், முகமது சிராஜ், லாக்கி பெர்குசன்

ராஜஸ்தான் அணி
யஷஸ்வி ஜெய்ஸ்வால், டாம் கோஹ்லர்-காட்மோர், சஞ்சு சாம்சன்(w/c), ரியான் பராக், துருவ் ஜூரல், ரோவ்மன் பவல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், அவேஷ் கான், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்