குவாலிஃபையர் 1: டாஸ் வென்ற ஐதராபாத் எடுத்த அதிரடி முடிவு.. ரன்மழை பொழியுமா?

Mahendran

செவ்வாய், 21 மே 2024 (19:35 IST)
கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தற்போது நிறைவு கட்டத்தை அடைந்து விட்டது என்பதும் இன்று முதல் பிளே ஆஃப் போட்டிகள் நடைபெற உள்ளது என்பதும் தெரிந்தது. 
 
இன்றைய முதல் குவாலிஃபயர் 1 பிளே ஆஃப் போட்டியில் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிடும் நிலையில் ஐதராபாத் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய திட்டமிட்டுள்ளது 
 
ஹைதராபாத் அணி கடந்த சில போட்டிகளில் அதிரடி ஆட்டம் ஆடி 200 ரன்களுக்கு மேல் எடுத்து வரும் நிலையில் இன்று டாஸ் வென்ற அந்த அணி பேட்டிங் எடுத்துள்ளது. இதனை அடுத்து இன்றும் அதிரடியாக ரன்களை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இன்றைய போட்டியில் வெல்லும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெரும் என்றும் இன்றைய போட்டியில் தோல்வி அடையும் அணி, எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் மோதி குவாலிஃபயர் 2 போட்டியில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இரு அணிகளிலும் விளையாடும் வீரர்கள் குறித்த நாங்கள் தகவலை தற்போது பார்ப்போம்
 
கொல்கத்தா: சுனில் நரேன், ரஹ்மானுல்லா, ஸ்ரேயாஸ் அய்யர், வெங்கடேஷ் அய்யர், ரிங்கு சிங், ரஸல், ரமந்தீப் சிங், ஸ்டார்க், அரோரா, ராணா, வருண் சக்கரவர்த்தில் 
 
இம்பாக்ட் வீரர்கள்; அனுகுல் ராய், மனிஷ் பாண்டே, நிதிஷ் ரானா, பரத், ரூதர்போர்டு
 
ஐதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, நிதிஷ்குமார், க்ளாசன், ஷபாஸ் அகமது, அப்துல் சமத், பேட் கம்மின்ஸ், புவனேஷ்வர் குமார், வியாஸ்கான், நடராஜன்
 
இம்பாக்ட் வீரர்கள்: உம்ரான் மாலிக், சன்வீர் சிங், க்ளன் பிலிப்ஸ், வாஷிங்டன் சுந்தர், உனாகட்
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்