இதுதான் உங்கள் சிறந்த இன்னிங்ஸாக பேசப்படும்… கோலியைப் பாராட்டிய சச்சின்!

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2022 (07:35 IST)
இந்திய அணியின் வெற்றிக்குக் காரணமாக அமைந்த கோலியின் இன்னிங்ஸை பாராட்டி சச்சின் டெண்டுல்கர் ட்வீட் செய்துள்ளார்.

நேற்றைய இந்தியா பாகிஸ்தான் போட்டியில் விராட் கோலியின் அற்புதமான இன்னிங்ஸ் காலாகாலத்துக்கும் அவர் பேர் சொல்லும் ஒரு இன்னிங்ஸாக அமைந்துள்ளது, ஒரு கட்டத்தில் 31 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறிய இந்திய அணியை கோலியும் ஹர்திக் பாண்ட்யாவும் நிலைத்து நின்று விளையாடி மீட்டனர். அதிலும் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றியை இந்திய அணியின் வசமாக்கினார்.

இந்நிலையில் கோலியை கிரிக்கெட் உலகம் போற்றி பாராட்டிக் கொண்டிருக்கும் நிலையில் இந்திய அணியின் லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் கோலியின் இன்னிங்ஸை பாராட்டி “இதுதான் உங்கள் கிரிக்கெட் வாழ்க்கையின் மிகச்சிறந்த இன்னிங்ஸாக இருக்கும்” எனக் கூறியுள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்