ரோஹித் ஷர்மான்னா அன்பு… புகழ்ந்து தள்ளிய ரிஷப் பண்ட்!

vinoth

செவ்வாய், 21 ஜனவரி 2025 (09:05 IST)
கடந்த 2022 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த அவருக்கு தசைநார் கிழிவுக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இப்போது காயத்தில் இருந்து குணமாகியுள்ள மீண்டும் சர்வதெசக் கிரிக்கெட்டுக்கு திரும்பி முன்பை விட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

ஐபிஎல், டி 20 உலகக் கோப்பை மற்றும் தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடர்கள் என அனைத்திலும் அவர் பங்களிப்பு மிகச்சிறப்பாக உள்ளது. இதையடுத்து ஐபிஎல் ஏலத்தில் இதுவரை எந்தவொரு வீரரும் செல்லாத அளவுக்கு 27 கோடி ரூபாய்க்கு அவர் விலையோயுள்ளார். அதன் பின்னர் அவர் தற்போது லக்னோ அணிக்குக் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கேப்டன் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் பேசிய அவர் “லக்னோ அணிக் கோப்பையை வெல்ல எனது 200 சதவீத உழைப்பைக் கொடுப்பேன். என் மீது நிர்வாகம் வைத்த நம்பிக்கைக் காப்பாற்ற அனைத்தையும் செய்வேன். எனது மூத்தக் கேப்டன்களிடம் இருந்து அதிகம் கற்றுள்ளேன். ரோஹித் ஷர்மாவிடம் இருந்து எப்படி அணி வீரர்களிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும் எனக் கற்றுள்ளேன்” எனப் பேசியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்