ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவி பறிப்பு.... குறைந்து வரும் ஃபாலோயர்களின் எண்ணிக்கை

Webdunia
வெள்ளி, 15 டிசம்பர் 2023 (21:18 IST)
மும்பை இந்தியன்ஸ் அணியின்  10 ஆண்டுகளாக மும்பை அணிக்கு கேப்டனாக இருந்த ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக ஹர்த்திக் பாண்ட்யாவை நியமித்துள்ளது அணி நிர்வாகம்.

இதுகுறித்து அந்த அணி தெரிவித்துள்ளதாவது:

‘’ரோஹித் சர்மாவின் ஒப்பற்றை தலைமைக்கு  நன்றி. கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் மும்பை அணிக்கு  கேப்டனாக அவரது பங்களிப்பு அசாதாரணமானது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றியைக் குவித்தது மட்டுமில்லாமல் ஐபிஎல் வரலாற்றில் சிறந்த  கேப்டனாகவும் அவர் இடம்பிடித்துள்ளார்.,

அணியை மேலும், வலுப்படுத்த களத்திலும்,  வெளியிலும் அவரின் வழிக்காட்டுதல்களை எதிர்பார்க்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளது.

அணியின் இந்த திடீர் முடிவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாத ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். மேலும்  எக்ஸ் தளம் உள்ளிட்ட பல்வேறு சோசியல் மீடியாவில் அதன் ஃபாலோயர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இதற்கு முன்னதாக சச்சினிடம் இருந்து கேப்டன்  பதவி பறிக்கப்பட்டு, ரோஹித் சர்மாவிடம் கொடுக்கப்பட்ட போதும் இதே விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.  

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்