நாளை ஐந்தாவது டெஸ்ட்… ஓவல் மைதானத்தில் இந்திய அணியின் சோக வரலாறு!

vinoth

புதன், 30 ஜூலை 2025 (14:36 IST)
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடந்து வரும் ‘ஆண்டர்சன் –டெண்டுல்கர்’ தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சில தினங்களுக்கு முன் நடந்து முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டி ‘டெஸ்ட் போட்டிக்கே உரிய அம்சத்தோடு’ நடந்து சமனில் முடிந்துள்ளது. இதன் மூலம் தொடர் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியின் ஆதிக்கத்தில் உள்ளது.

இதையடுத்து நாளை ஐந்தாவது டெஸ்ட் போட்டி புகழ்பெற்ற ஓவல் மைதானத்தில் நடக்கவுள்ளது. ஓவல் மைதானம் இந்திய அணிக்கு மிகவும் துரதிர்ஷ்டமான மைதானமாகவே இதுவரை அமைந்துள்ளது. இந்திய அணி இதுவரை 15 டெஸ்ட் போட்டிகளை இந்த மைதானத்தில் விளையாடியுள்ளது. அதில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

ஏழு தோல்விகளைப் பெற்றுள்ள நிலையில் ஆறு போட்டிகளை சமனில் முடித்துள்ளது. இதற்கிடையில் ஓவல் மைதானப் பராமரிப்புக் குழுவினரோடு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதால் நாளை நடக்கவுள்ள போட்டிக்குப் பரபரப்பு அம்சம் கொஞ்சம் கூடியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்