ஒரே தொடர்தான்… சராசரியில் ஏற்றம் கண்ட ஷுப்மன் கில்!

vinoth

புதன், 30 ஜூலை 2025 (13:28 IST)
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி ‘டெஸ்ட் போட்டிக்கே உரிய அம்சத்தோடு’ நடந்து சமனில் முடிந்துள்ளது. இதனால் தற்போது 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது. இந்திய அணித் தொடரை சமன் செய்ய எப்படியாவது ஐந்தாவது போட்டியை வென்றாக வேண்டும். இல்லையென்றால் தொடரை இழக்க வேண்டியிருக்கும்.

இந்த தொடரில் இந்திய அணி பின்தங்கி இருந்தாலும் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்ட ஷுப்மன் கில்லுக்கு ஒரு திருப்புமுனை தொடராக அமைந்துள்ளது. இந்த தொடரில் அவர் இதுவரை 722 ரன்கள் சேர்த்துள்ளார். இந்த தொடருக்கு முன்பாக அவரது சராசரி 36.57 ஆக இருந்தது.

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் இரட்டை சதம் மற்றும் சதம் அடித்ததன் மூலம் அவரின் சராசரி 6 புள்ளிகள் உயர்ந்து 42.72 ஆக தற்போது உள்ளது. ஒரே தொடரில் தன்னுடைய சராசரியை 6.15 புள்ளிகள் உயர்த்தி சாதனைப் படைத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்