கே.எல்.ராகுல், ஜடேஜா, துருவ் அடித்த சதங்கள்.. 500ஐ நெருங்கியது இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்..!

Siva

வெள்ளி, 3 அக்டோபர் 2025 (18:04 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே தொடக்க ஆட்டக்காரர் கே.எல். ராகுல் சதம் அடித்திருந்த நிலையில், தற்போது  துருவ் ஜுரேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரும் சதம் அடித்து அசத்தியுள்ளனர்.
 
இந்த போட்டியில், கே.எல். ராகுல் 100 ரன்களும், துருவ் ஜுரேல் 125 ரன்களும் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ரவீந்திர ஜடேஜா, ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இரண்டாவது நாள் ஆட்டம் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 448 ரன்கள் எடுத்துள்ளது. இதனை அடுத்து, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட, இந்திய அணி 286 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்த வலுவான முன்னிலையின் காரணமாக, இந்திய அணிக்கு இந்த டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்