இதுகுறித்து நடவடிக்கை எடுத்துள்ள ஐபிஎல் நிர்வாகம் ஹர்ஷித் ராணாவுக்கு ஒரு போட்டியின் 100 சதவீத சம்பளத்தையும் அபராதமாக விதித்ததுடன், அடுத்த ஒரு போட்டியில் விளையாடவும் தடை விதித்துள்ளது. அது பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. ஆனால் அந்த அணி கோப்பையை வென்ற பின்னர் அந்த அணியின் உரிமையாளர் ஷாருக் கான் அனைத்து வீரர்களையும் ப்ளையிங் கிஸ் கொடுக்க சொல்லி கேட்டு, அதன்படி அனைவரும் செய்தனர்.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய அந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்ஷித்ராணா “மைதானத்துக்கு வெளியே நான் அன்பானவன். ஆனால் களத்துக்குள் நான் நண்பர்களை உருவாக்கிக் கொள்ள வரவில்லை. அபிஷேக் போரல் என் ஓவரில் 16 ரன்களை சேர்த்தார். அவர் அப்படி சிக்ஸ்கள் அடிக்கும் போது உங்களால் சிரிக்க முடியுமா?. அடுத்த ஓவரில் நான் அவர் விக்கெட்டை எடுத்ததற்காக தடை செய்யப்பட்டேன்.” என்க கூறியுள்ளார்.