கே.எல்.ராகுல் அபார சதம்.. மே.இ.தீவுகள் பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கும் இந்திய பேட்ஸ்மேன்கள்..!

Mahendran

வெள்ளி, 3 அக்டோபர் 2025 (11:43 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையில் நடந்து வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, மேற்கிந்தியத் தீவு பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கி அபாரமாக ரன்களை குவித்து வருகிறது.
 
முன்னதாக, மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் வெறும் 162 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், இந்திய அணி தற்போது முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
 
தொடக்க ஆட்டக்காரர் ஜெயஸ்வால் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், இன்னொரு தொடக்க ஆட்டக்காரரான கே.எல். ராகுல் அபாரமாக விளையாடிச் சதம் அடித்துள்ளார். அவர் 192 பந்துகளில் 100 ரன்கள் எடுத்துள்ளார் என்பதும், இதில் 12 பவுண்டரிகள் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
அதேபோல், கேப்டன் கில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தற்போது துருவ் 14 ரன்களுடனும், கே.எல். ராகுல் 100 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
 
இந்திய அணி சற்றுமுன் வரை 67 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்துள்ளது என்பதும், தற்போது முதல் இன்னிங்ஸில் 56 ரன்கள் முன்னிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்