இந்திய அணியின் ஜடேஜா, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில், முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியின் சாதனையை சமன் செய்து மற்றொரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
அகமதாபாத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில், ஜடேஜா தனது 78-வது சிக்ஸரை அடித்து இந்த சாதனையை அடைந்தார். தோனி தனது டெஸ்ட் வாழ்வில் 78 சிக்ஸர்கள் அடித்திருந்தார்.
இந்த சாதனையை தாண்டி, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட் ஆவார். அவர் வீரேந்திர சேவாக்குடன் முதலிடத்தை பகிர்ந்து கொள்கிறார். ஜடேஜா இன்னும் 12 சிக்ஸர்கள் அடித்தால் சேவாக், ரிஷப் சாதனையை சமன் செய்வார்.