இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கே.எல். ராகுல் சதம் அடித்ததை தொடர்ந்து, மூன்று பேட்ஸ்மேன்கள் அரை சதம் அடித்து அசத்தியுள்ளனர். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.
தற்போது இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் நிலையில், அபாரமாக விளையாடிய கே.எல். ராகுல் சதம் அடித்தார். அவரை தொடர்ந்து சுப்மன் கில் அரை சதம் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். தற்போது களத்தில் விளையாடி வரும் துருவ் மற்றும் ஜடேஜா இருவருமே அரை சதம் அடித்து அசத்தியுள்ளனர்.
துருவ் 74 ரன்களுடனும் ஜடேஜா 51 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். இந்த நிலையில், இந்திய அணி தற்போது வரை 98 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 333 ரன்கள் எடுத்து, முதல் இன்னிங்ஸில் 171 ரன்கள் முன்னணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.