தற்போது சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். அவர் முகத்துக்காகவே ஐபிஎல் போட்டிகளில் அதிக ஸ்பான்சர்கள் கிடைப்பதாகவும், அதிக டிக்கெட்கள் விற்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவரைக் கௌரவிக்கும் விதமாக ஐசிசி ஹால் அஃப் ஃபேம்-ல் அவர் பெயர் சமீபத்தில் இடம்பெற்றது.
இந்நிலையில் தோனி இன்று தனது 44 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையடுத்து சமூகவலைதளங்களில் அவருக்கு வாழ்த்து மழைகள் பொழிந்து வருகின்றன. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது பதிவில் “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தோனி., ஒவ்வொரு நகர்விலும் அழுத்தங்களைக் கவிதையாக மாற்றிய ஒரு rare OG.
உங்களுடைய பெருமைகள் பிறந்தவையல்ல. அவை ஒரு நேரத்தில் ஒரு முடிவு, ஒரு ரன், ஒரு நம்பிக்கை என்பதன் மூலம் உருவாக்கப்பட்டவை என்று நிரூபித்தவர். என புகழாரம் சூட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.