பாலிவுட் நடிகைகளை மிஞ்சும் சம்பளம்… ஒரே படத்தில் உச்சத்துக்கு சென்ற ராஷ்மிகா!

vinoth
செவ்வாய், 18 ஜூன் 2024 (12:01 IST)
இப்போது இந்திய அளவில் பிரபலமான நடிகையாக ராஷ்மிகா இருந்தாலும், அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக மாறியுள்ள அவரை ரசிகர்கள் செல்லமாக நேஷனல் க்ரஷ் என அழைத்து வருகின்றனர்.

சமீபத்தில் அவர் பாலிவுட்டில் அனிமல் நடித்தார். அடுத்து தெலுங்கில் புஷ்பா 2, தமிழில் ரெயின்போ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் தெலுங்கில் அடுத்து நடித்து வரும் கேர்ள் பிரண்ட் படத்தை ராகுல் ரவீந்திரன் இயக்குகிறார். புஷ்பா மற்றும அனிமல் ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு அவரின் மார்க்கெட் உச்சத்துக்கு சென்றுள்ளது.

இந்நிலையில் முருகதாஸ் அடுத்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான சல்மான் கானோடு இணைந்து ஒரு படத்தை உருவாக்க உள்ளார். இந்த படத்தின் பட்ஜெட் 400 கோடி ரூபாய்க்கு மேல் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகாவுக்கு 13 கோடி ரூபாய் சம்பளமாகக் கொடுக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்