கேப்டனாக டெஸ்ட் கிரிக்கெட்டில் முக்கியமான மைல்கல்லை எட்டிய பேட் கம்மின்ஸ்!

vinoth
வெள்ளி, 1 மார்ச் 2024 (15:20 IST)
ஐபிஎல் மினி ஏலம் கடந்த ஆண்டு இறுதியில்  துபாயில் நடைபெற்ற நிலையில் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் மிக அதிக தொகைக்கு ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். இவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூபாய் 24.75 கோடிக்கு ஏலம் எடுத்தது.

கடந்த ஆண்டு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை மற்றும் உலகக் கோப்பை தொடரை அவர் தலைமையில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. அதனால் அவர் மீது கிரிக்கெட் உலகின் கவனம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்போது அவர் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி நியுசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது.

இந்நிலையில் இப்போது அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக 100 விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். 47 இன்னிங்ஸில் அவர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இந்த மைல்கல்லை எட்டியுள்ள 10 ஆவது வீரர் பேட் கம்மின்ஸ் ஆவார். இதில் 71 இன்னிங்ஸில் 187 விக்கெட்கள் வீழ்த்தி இம்ரான் கான் முதலிடத்தில் இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்