விராட் கோலி- அனுஷ்கா சர்மா தம்பதிக்கு 2 வது குழந்தை....என்ன பெயர் தெரியுமா?

Sinoj

செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (21:30 IST)
விராட் கோலி- அனுஷ்கா சர்மா தம்பதிக்கு கடந்த 15 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்  கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி  சமீபத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடினார்.
 
தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார்.
 
கடந்த 2017 ஆம் ஆண்டு பாலுவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இத்தம்பதிக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது.
 
இந்த நிலையில்,  விரட் கோலி, அனுஷ்கா தம்பதி தங்கள் 2 வது குழந்தையை வரவேற்க தயாராகிவிட்டதாகவும்,அதனல் கோலி தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிடுகிறார் என்று தகவல்கள் வெளியானது.
 
இந்த நிலையில், விராட் கோலி- அனுஷ்கா சர்மா தம்பதிக்கு கடந்த 15 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து  நடிகை அனுஷ்கா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,  ''தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், குழந்தைக்கு Akaay எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும்' பதிவிட்டுள்ளார்.
 
விராட் கோலி - அனுஷ்கா தம்பதிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்