முதல் இன்னிங்ஸில் 486 சேர்த்தது பாகிஸ்தான் -ஆஸ்திரேலியா பவுலர்கள் திணறல்

Webdunia
செவ்வாய், 9 அக்டோபர் 2018 (10:08 IST)
துபாயில் நடைபெற்று வரும் அஸ்திரேலியாவுக்கெதிரான முதல் டெஸ்ட்டில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 486 ரன்கள் சேர்த்து வலுவான தொடக்கம் அமைத்துள்ளது.

அக்டோபர் 7-ந்தேதி தொடங்கிய முதல் டெஸ்ட்டில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இனாம் உல் ஹக் மற்றும் முகமது ஹஃபீஸ் ஜோடி நிதானமாக விளையாடி. முதல் விக்கெட்டுக்கு 206 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் மூத்தவீரர் ஹஃபீஸ் சதமடித்து அசத்தினார். முதல் நாள் ஆட்டமுடிவில் 3 விக்கெட்களை இழந்து 255 ரன்கள் சேர்த்தது. ஹஃபீஸ் 126 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதைத் தொடர்ந்து இரண்டாம் ஆட்டத்தைத் தொடங்கிய பாகிஸ்தானின் ஹாரிஸ் சோஹைல் மற்றும் அஸாத் ஷஃபீக் இருவரும் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். அஸாத் ஷஃபீக் 80 ரன்களுக்கு அவுட் ஆக சோஹைல் சதமடித்தார். அவர் 110 ரன்களை சேர்த்திருந்த போது லயன் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அதைத் தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆக பாகிஸ்தான் 482 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் சிடில் 3 விக்கெட்களும் நேதன் லயன் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

அதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் சேர்த்துள்ளது. ஆரோன் பிஞ்ச் 13 ரன்களோடும் உஸ்மான் கவாஜா 17 ரன்களோடும் களத்தில் உள்ளனர்.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்