இரண்டாண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் அணியில் முகமது ஹபீஸ்

செவ்வாய், 2 அக்டோபர் 2018 (10:23 IST)
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக  துபாயில் அக்டோபர் 7-ந்தேதி தொடங்கவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் முகமது ஹஃபீஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணியின்  சிறந்த அதிரடி வீரராகவும், பகுதிநேர சுழற்பந்து வீச்சாளராகவும் விளங்கியவர் ஹஃபீஸ். கடந்த 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியதே அவரது கடைசி சர்வதேச போட்டியாகும்.

அந்த தொடரில் பேட்டிங் மட்டும் பௌலிங்கில் சொதப்பியதே அவரது நீக்கத்துக்கு காரணமாகும். அத்தொடரில் 6 இன்னிங்ஸ்களில் விளையாடி வெறும் 102 ரன்களே அவரால் அடிக்க முடிந்தது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அணியில் இடம் கிடைக்காமல் போராடி வந்தார்.

தற்போது பாகிஸ்தான் அணியின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக இருப்பதாலும் அணிக்கு சுழற்பந்து வீச்சாளரின் தேவை இருப்பதாலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவரை அணியில் சேர்த்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் உள்ளூர் போட்டிகளில் ஹஃபீஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதும் அதற்கு முக்கியக் காரணமாகும். பெஷாவர் அணிக்கெதிராக கடைசியாக அவர் விளையாடிய உள்ளூர் போட்டியில் கூட இரட்டைச்சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 37 வயதாகும் ஹஃபீஸ் இதுவரை 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3452 ரன்களை சேர்த்துள்ளார். அவரது சராசரி 40. பௌலிங்கில் 52 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்