பிரபல இந்திய கிரிக்கெட் வீரருக்கு திருமணம்!

Webdunia
செவ்வாய், 12 ஜூன் 2018 (17:39 IST)
ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய கிரிக்கெட் வீரர் நிதீஷ் ராணாவிற்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளது.

 
 
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக சிறப்பாக விளையாடியவர் நிதீஷ் ராணா. இவர் கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார்.
 
இக்கட்டான நேரத்தில் அணிக்கு கைக்கொடுக்கும் சிறந்த இடது கை பேட்ஸ்மென் இவர். இவரது சிறப்பான ஆட்டத்தால் ஐபிஎல்லில் அவர் விளையாடிய அணிக்கு பலமுறை வெற்றி தேடி தந்துள்ளார்.
 
இந்நிலையில், நிதீஷ் ராணாவுக்கும், அவரது காதலி சாச்சிக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக அவரது நண்பரும், டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் வீரருமான துருவ் ஷோரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்