உத்திரபிரதேச மாநிலம் ஷியாம் நகரை சேர்ந்தவர் சாந்தி. இவருக்கும் சுஜித் என்ற வாலிபருக்கும் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். ஆனால், திருமணத்திற்கு பின்னர் சாந்தி கணவரோடு வாழ வராமல் தனது தாய் வீட்டிலேயே இருந்துள்ளார்.
இதனால், தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு சுஜித் அழைத்துள்ளார். அப்போது அவர், தான் ரவி என்பவரை காதலித்து வந்ததாகவும், ஆனால் தனது சம்மதததை கேட்காமல் பெற்றோர் திருமணம் செய்து வைத்து விட்டதாவும், காதலனை மனதில் சுமந்து கொண்டு உங்களுடன் வாழ முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.