உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து கோப்பையைக் கைப்பற்றியது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இன்றோடு முடிய உள்ளது. இந்நிலையில் மழைக் காரணமாக இரண்டு நாட்கள் போட்டி பாதிக்கப்பட்டதால் டிராவை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் இரண்டு அணிகளும் பேட்டிங்கில் சோபிக்கவில்லை என ரசிகர்கள் விமர்சித்தனர்.
இருப்பினும் நிதானமாக ஆடிய நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் அதிகபட்சமாக 52 ரன்களும், ராஸ் டெய்லர் 47 ரன்களும் எடுத்தனர். அத்துடன் ஐசிசி கிரிக்கெட் வரலாற்றில் முதல் டெஸ்ட் சாம்பியன் கோப்பை வென்ற அணி என்ற சாதனையும் படைத்ததுள்ளது. ரசிகர்கள் நியூசிலாந்து அணிக்கும் அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
NEW ZEALAND ARE THE INAUGURAL ICC WORLD TEST CHAMPIONSHIP WINNERS