நியுசிலந்து அணியில் இருந்து விலகுகிறாரா ட்ரண்ட் போல்ட்… அதிர்ச்சி செய்தி!

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2022 (09:56 IST)
நியுசிலாந்து அணியின் ட்ரண்ட் போல்ட் உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக கருதப்படுபவர்.

இந்நிலையில் இப்போது அவர் நியுசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் மைய உறுப்பினர் ஒப்பந்தத்தில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் அவர் இனிமேல் நியுசிலாந்து அணிக்காக விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மனைவி மற்றும் 3 குழந்தைகள் இருப்பதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் உலகம் முழுவதும் நடக்கும் டி 20 லீக் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக பல வீரர்களும் இதுபோல தேசிய அணிகளில் விளையாடுவதை தவிர்த்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்