மும்பை இந்தியன்ஸ் அணிக்குப் பின்னடைவு… இளம் வீரர் விலகல்!

vinoth

வியாழன், 1 மே 2025 (12:48 IST)
நடந்து வரும் ஐபிஎல் தொடரில் பரிதாபகரமான நிலையில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி அடுதத்டுத்து ஐந்து வெற்றிகளைப் பெற்று தற்போது புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பு அந்த அணிக்குப் பிரகாசமாகியுள்ளது.

தற்போது பத்துப் போட்டிகளில் ஆறு போட்டியை வென்று புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் ப்ளே ஆஃப்க்கு செல்லும் முனைப்பில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பின்னடைவாக அந்த அணியின் இளம் பவுலர் விக்னேஷ் புத்தூர் காயம் காரணமாக எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இது மும்பை அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இன்று மும்பை இந்தியன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து பலப்பரீட்சை செய்யவுள்ளது. இந்த போட்டி ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மைதானத்தில் நடக்கவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்