டி 20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் காயத்தில் இருந்து மீண்ட வீரர்கள் அணியில் இணைந்துள்ளனர்.
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த தொடருக்கான அணிகளின் வீரர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதையடுத்து சமீபத்தில் இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த அணியில் இரண்டு வீரர்கள் இல்லாதது குறித்து முன்னாள் கேப்டன் முகமது அசாரூதின் தெரிவித்துள்ளார். அதில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் முகமது ஷமி ஆகியோர் தீபக் ஹூடா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோருக்கு பதில் எடுத்திருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.