விமானத்தை தவறவிட்ட ஹெட்மயர்! அணியை விட்டு நீக்கிய வெஸ்ட் இண்டீஸ்!
செவ்வாய், 4 அக்டோபர் 2022 (08:42 IST)
உலகக்கோப்பை டி20 போட்டிக்கு சென்ற ஹெட்மயர் விமானத்தை தவறவிட்டதால் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முக்கியமான பேட்ஸ்மேன்களில் ஒருவர் ஷிம்ரான் ஹெட்மயர். வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்காக பல்வேறு சர்வதேச ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியுள்ள ஹெட்மயர், ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.
தற்போது வெஸ்ட் இண்டீஸுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான உலகக்கோப்பை டி20 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணியினர் ஆஸ்திரேலியா சென்றுள்ளனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலியா புறப்பட்ட ஹெட்மயர் துரதிர்ஷ்டவசமாக தான் செல்ல வேண்டிய விமானத்தை தவறவிட்டுள்ளார். இதனால் அவரை உலககோப்பை டி20 அணியிலிருந்து நீக்கியுள்ளனர். தனிப்பட்ட காரணங்களுக்காக ஒருநாள் விமான பயணத்தை ஒத்திவைக்க அவர் விடுத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.