யார் இந்த குட்டி மலிங்கா? ஹை வோல்டேஜ் போட்டியில் கலக்கிய சி எஸ் கே பவுலர்!

Webdunia
செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (10:03 IST)
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 226 ரன்கள் எடுத்தது. 227 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணியின் டூபிளஸ்சிஸ் மற்றும் மேக்ஸ்வெல் அபார ஆட்டத்தால் இலக்கை நெருங்கியது. ஆனால் அவர்கள் இருவரும் அவுட் ஆனவுடன் மற்ற பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க திணறியதால் 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்தது.

இந்த போட்டியில் கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பந்துவீசிய சி எஸ்கே அணியின் 20 வயது வீரர் மதீஷ பிரதினா. மிகச்சிறப்பாக வீசிய அவர் 10 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். இந்த போட்டியில் அவர் நான்கு ஓவர்களில் 42 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். இவரின் பவுலிங் ஆக்‌ஷன் கிட்டத்தட்ட மலிங்கா போலவே இருப்பதால் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்