இரண்டாவது டெஸ்ட்டில் கோலி விளையாடுவாரா?... புகைப்படம் வெளியிட்டு அப்டேட் கொடுத்த பிசிசிஐ!

vinoth
புதன், 4 டிசம்பர் 2024 (16:27 IST)
இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் டிசம்பர் 6ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.

இந்நிலையில் நாளை டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலி, காலில் கட்டுடன் காணப்படும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் அவர் காயம் அடைந்துள்ளாரா? அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா என்றெல்லாம் கேள்விகள் எழுந்துள்ளன. இது குறித்து பிசிசிஐ தரப்பில் இருந்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று கோலி பயிற்சியில் ஈடுபடும் புகைப்படத்தை வெளியிட்டு கோலி அடிலெய்ட் டெஸ்ட்டில் விளையாடுவார் என்பதை பிசிசிஐ உறுதிப்படுத்தியுள்ளது. அடிலெய்ட் டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக பிங்க் பந்து போட்டியாக நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்