கோலி & ரோஹித்துக்கு சிறப்பான ‘send off’ கொடுக்க விரும்புகிறோம்… ஆஸி கிரிக்கெட் வாரிய அதிகாரி!

vinoth

திங்கள், 6 அக்டோபர் 2025 (09:02 IST)
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அக்டோபர் 19-ஆம் தேதி பெர்த்தில் தொடங்கவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய  அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இந்த தொடருக்கான அணியில் ரோஹித் ஷர்மா இடம்பெற்றிருந்தாலும் அவரின் கேப்டன் பதவி நீக்கப்பட்டு சுப்மன் கில் புதியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடருக்கு ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் விளையாடுவது உறுதியில்லை என்பதால் புதிய அணியை உருவாக்கும் விதமாக கேப்டன்சி மாற்றப்பட்டுள்ளதாக தேர்வுக்குழு தலைவர் அகார்கர் தெரிவித்துள்ளார். இதனால் இந்த தொடரோடு ரோஹித் ஷர்மா ஓய்வறிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியான டாட் கிரேன்பெர்க் தெரிவித்துள்ள ஒரு விஷயம் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் “கோலி மற்றும் ரோஹித் ஆகிய இரு ஜாம்பவான்கள் எங்கள் நாட்டில் விளையாடுவதுதான் இதுதான் கடைசி முறையாக இருக்கலாம். அவர்கள் சர்வதேசக் கிரிக்கெட்டுக்கு அளித்த பங்களிப்புக்காக அவர்களை மிகச்சிறப்பாக வழியனுப்ப வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்