மகளிர் உலக கோப்பை இரண்டாவது அரையிறுதியில், இந்திய அணி ஹர்மன்பிரீத் கௌர் மற்றும் ஜெமிமா ரோட்ரிகஸ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்த சாதனையைத் தொடர்ந்து பேசிய முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், இந்திய அணி உலக கோப்பையை வென்றால், தான் ஜெமிமா ரோட்ரிகஸுடன் இணைந்து ஒரு பாடலை பாடுவேன் என்று சுவாரஸ்யமான வாக்குறுதி அளித்தார்.
"இந்தியா கோப்பையை வென்றால், அவட் கித்தார் வாசிக்க, நான் பாடுவேன். பி.சி.சி.ஐ விருது விழாவில் நாங்கள் இதை ஏற்கெனவே செய்துள்ளோம். அவர் சம்மதித்தால் மீண்டும் அதை செய்வேன்," என்று அவர் உற்சாகமாகத் தெரிவித்தார்.