சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி அறிவிப்பதில் தாமதம்!

vinoth
திங்கள், 13 ஜனவரி 2025 (08:11 IST)
அடுத்த மாதம் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அரசியல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மறுத்துள்ளது. இதனால் தொடர் ஹைபிரிட் மாடலில் நடத்தப்பட உள்ளது.

அதன்படி இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் உள்ள ’துபாய் இண்டர்நேஷனல் மைதானத்தில்’ நடக்கவுள்ளது. லீக் சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியும் அந்த மைதானத்தில் நடக்கும் என சொல்லப்படுகிறது. ஒருவேளை இந்திய அணி அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் அந்த போட்டிகளும் பாகிஸ்தானில் நடக்காது.

இந்நிலையில் இந்த தொடருக்காக அனைத்து நாட்டு வாரியங்களும் தங்கள் அணியை அறிவித்து விட்டன. இந்நிலையில் இந்திய அணி ஐசிசியிடம் ஒரு வாரம் அவகாசம் கேட்டு பெற்றுள்ளது. இதனால் இந்திய அணி வரும் 19 ஆம் தேதிதான் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்