19 வயதுக்குட்பட்ட ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை ஜனவரி 18ஆம் தேதி தொடங்க இருக்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன.
இந்த தொடரில் ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, மலேசியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஸ்காட்லாந்து, தென்னாபிரிக்கா, இலங்கை, அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகள் மற்றும் சமோயா என மொத்தம் 13 அணிகள் மோதுகின்றன.
ஜனவரி 18ஆம் தேதி தொடங்கும் 19 வயதுக்குட்பட்ட ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடர் பிப்ரவரி 25ஆம் தேதி நிறைவு பெறுகிறது என்பதும் அன்றைய தினம் தான் இறுதி போட்டி கோலாலம்பூரில் நடைபெற உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.