ஒரே தொடரில் 4 சதம் அடித்த இந்திய வீரர்

Webdunia
புதன், 15 டிசம்பர் 2021 (00:12 IST)
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் விளையாட்டுப் போட்டிகளில் ஒன்று விஜய் ஹசாரே கோப்பை ஆகும்.

இத்தொடரில், பல்வேறு மாநிலங்கள் விளையாடும். இந்த நிலையில் மஹாராஷ்டிரா அணியின் கேப்டன் ருத்துராஜ் ஒரே தொடரில் 4 சதங்களை அடித்த 4 வது வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

இதற்கு முன், கோலி, படிக்கல், பிரித்வி ஷா ஆகியோர் தலா ஒரே தொடரில் 4 சதங்களை அடித்து சாதனை படைத்துள்ளார். இந்த வரிசையில் ருத்துராஜும் இணைந்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், மத்திய பிரதேச அணிக்கு எதிராக 136 ரன்களும், சத்திஏக்கர் அணிக்கு எதிரான 154 ரன்களும், கேரள அணிக்கு எதிராக 124 ர்னகளும், சண்டிகர் அணிக்கு எதிராக 168 ரன்களும் அடித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்