இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பான்சர் ? புதிய தகவல்

Webdunia
செவ்வாய், 23 மே 2023 (21:41 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஸ்பான்சர்ஷிப் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

உலகளவில் இந்தியாவில் அதிகளவில் கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர். இந்திய கிரிக்கெட் அணிக்கு ரசிகர்கள் அதிகம். அதேசமயம் இந்திய கிரிக்கெட் வாரியமும் வருவாயில் முன்னணியில் உள்ளது.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய  ஸ்பான்சர்ஷிப் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டில் இருந்து 2020 ஆம் ஆண்டுவரை நைக் நிறுவனம் கிட் ஸ்பான்சராக இருந்தது. இதையடுத்தது, கிட் ஸ்பான்சராக இருந்த எம்பிஎல் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிந்தது.

இந்திய அணியின் முக்கிய ஸ்பான்சராக பைஜூஸ்  நிறுவனம் இருக்கும் நிலையில், புதிய கிட் ஸ்பான்ஷராக அடிடாஸ் நிறுவனத்தை பிசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தியா- ஆஸ்திரேலியா இடையே வரும் ஜூன் 7 ஆம் தேதி  நடைபெறவுள்ள  டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து அடிடாஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் ஆரம்பமாவதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்