விதிகளை மீறியதால் இந்திய வீரர்களுக்கு கொரோனா சோதனை! – பிசிசிஐ வெளியிட்ட முடிவு!

Webdunia
திங்கள், 4 ஜனவரி 2021 (08:48 IST)
பாதுகாப்பு வளையத்தை மீறி இந்திய கிரிக்கெட் வீரர்கள் சிலர் சென்றதால் மொத்த வீரர்களுக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்று பயண ஆட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் தொடருக்காக மெல்போர்னில் இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொண்டுள்ள நிலையில் ப்ரித்விஷா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட சில வீரர்கள் பாதுகாப்பு வளையத்தை மீறி புத்தாண்டில் வெளியே உள்ள உணவகத்தில் உணவருந்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் உடனடியாக அனைத்து இந்திய அணி வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில் வீரர்கள் யாருக்கும் கொரோனா இல்லை என பிசிசிஐ உறுதிப்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்