டெஸ்ட் போட்டியில் நடராஜன் சிறப்பாக செயல்பட முடியாது: வார்னர்

Webdunia
ஞாயிறு, 3 ஜனவரி 2021 (14:04 IST)
தமிழகத்தைச் சேர்ந்த யார்க்கர் மன்னன் நடராஜன் ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி நல்ல விக்கெட்டுகளை எடுத்துள்ள நிலையில் தற்போது டெஸ்ட் அணியிலும் அவர் இடம் பெற்றுள்ளார். இருப்பினும் ஆடும் 11 பேர் அணியில் நடராஜன் இருப்பாரா என்பதை போட்டி தொடங்கும் வரை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் 
 
இந்த நிலையில் நடராஜனின் திறமை வெளியுலகத்திற்கு தெரிய காரணமாக இருந்தவர்வர்களில் ஒருவர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனும் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரருமான டேவிட் வார்னர். இவர் டெஸ்ட் அணியில் நடராஜன் இடம் பெற்றது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் 
 
நடராஜன் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வருமான வாய்ப்பு குறைவு என்றும் கூறியுள்ளார். இருப்பினும் அவர் சிறப்பாக செயல்பட எனது வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார் ஏற்கனவே ஒரு சில இந்திய வீரர்கள் டெஸ்ட் அணியில் நடராஜன் இணைப்பு தேவையில்லாதது என்று கூறிய நிலையில் டேவிட் வார்னர் அதே கருத்தை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்