இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது.
இந்த போட்டி பகலிரவு போட்டியாக பிங்க் வண்ண பந்து கொண்டு விளையாடப்படவுள்ளது. இதுவரை இரண்டு அணிகளும் பகலிரவு போட்டிகளில் விளையாடியதில் அதிக வெற்றிகளைப் பெற்றுள்ள அணியாக ஆஸ்திரேலிய அணி உள்ளது.
ஆஸ்திரேலியா இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 11-ல் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இந்திய அணியோ 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றியும் ஒரு போட்டியில் படுதோல்வியும் அடைந்துள்ளது. அந்த ஒரு தோல்வியும் ஆஸி அணிக்கு எதிராக கடந்த 2020 ஆம் ஆண்டு அடைந்த தோல்விதான். அதனால் இன்றைய போட்டியில் வென்று புது சாதனைப் படைக்குமா என்ற ஆவல் எழுந்துள்ளது.